வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே
காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மக்களிடையே வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
பாஜக வேண்டுமென்றே, பழிவாங்கும் நோக்கத்துடன், விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்யான வழக்குகளைப் பதிவு செய்கிறது.
இந்த பொய் வழக்கை எதிர்த்துப் போராடுவோம். நாம் ஆங்கிலேயர்களைப் பார்த்து பயப்படவில்லை. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் என்ன?
அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் எல்லைமீறிச் செல்கிறது. ஒரு இலக்கு இல்லை, ஒரு தீர்வு இல்லை, திசைதிருப்புதல் மட்டுமே உள்ளது. இந்திய வணிகம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. வரி விதிப்பு மற்றும் வரிப் போர் குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை. வெளிநாட்டுப் பயணத்தின்போது வெற்று வார்த்தைகளையே பேசிவிட்டு வருகின்றனர்.
பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக 90% நுகர்வோர்கள் புலம்புகின்றனர். வருவாய் உயராவிட்டாலும் அடிப்படை செலவு மட்டும் உயர்ந்துள்ளதாக 80% பேர் கூறுகின்றனர்.
2024 டிசம்பர் வரை பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் பொருள்கள் மீதான வரி விதிப்பில் ரூ. 39 லட்சம் கோடியை பாஜக அரசு ஈட்டியுள்ளது. 2025 காலாண்டில் நுகர்வோர் பொருள்கள் துறையின் விற்பனை 5% ஆக மட்டுமே உள்ளது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 50 கூட்டப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு எந்தவித பலனையும் இதுவரை பாஜக அரசு கொடுக்கவில்லை என விமர்சித்தார்.
இதையும் படிக்க | ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!
இதையும் படிக்க | ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?