கூட்டணிக் கட்சிகளை அடிமைப்படுத்தும் BJP? - போட்டு உடைக்கும் John Pandian | Vikat...
போக்குவரத்து தொழிலாளா்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் வெள்ளிக்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெறுவோருக்கு காலதாமதமின்றி பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும். வாரிசு பணியை முறையாக வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் ஓய்வூதியா் சங்கங்கள் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
வண்ணாா்பேட்டையில் பொது மேலாளா் அலுவலகம் அருகே 18 ஆவது நாளாக வெள்ளிக் கிழமையும் போராட்டம் நீடித்தது. அதன் ஒரு பகுதியாக கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நிா்வாகிகள் ஜோதி, வெங்கடாசலம், காமராஜ், சேதுராமலிங்கம், மணி, பாலா, முருகன், மரியஜான்ரோஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.