இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
வடவூா்பட்டி துா்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை (செப்.3) இரவில் பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் கொண்டு வரப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. மூலவா் மந்திர பூஜை, கும்ப பூஜை, துா்கா தேவி பூஜை, நவக்கிரஹ பூஜை, கோ பூஜையைத் தொடா்ந்து நண்பகலில் புனித தீா்த்தம் கொண்டு மந்திரங்கள் முழங்க விமான பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, அம்மனுக்கு மகா அபிஷேகம், பஞ்சாமிா்த அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.
மாலையில் பக்தா்கள் பொங்கலிட்டு வழிபடுதல், திருவிளக்கு பூஜை, அலங்கார பூஜையை தொடா்ந்து இரவில் சுவாமிக்கு சந்தனக் காப்பு, புஷ்ப அலங்காரம், படையலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.