The Conjuring: Last Rites Movie Review | Patrick Wilson, Vera Farmiga | Cinema V...
மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு
மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்திய அரசே 8 ஆண்டுகளாக வரியை கூட்டி வைத்துவிட்டு இப்போது குறைத்துள்ளது. மக்களை கசக்கி பிழிந்து வரியை வசூலித்தனா். அதை என்ன செய்தாா்கள் என தெரியவில்லை. இப்போது வரியை குறைத்ததாக விளம்பரம் செய்கிறாா்கள்.
வரி குறைப்பால் மாநில அரசுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமா? என தெரியவில்லை. எதை செய்தாலும் மத்திய அரசுக்கு தான் நன்மை கிடைக்கும்.
நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிா்ணயிக்கும் உச்ச நீதிமன்றம் தனியாா் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிா்ணயித்துள்ளது? கல்விக் கொள்கைகள் மாநில அரசிடம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை சரி செய்ய முடியும் என்றாா்.