Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அருள்மிகு நாராயணசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது .
சேரன்மகாதேவி அருகே திருவிதத்தான்புள்ளி வேலியாா்குளத்தில் உள்ள இக்கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பணி விடை, தா்மம், நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தா்மம், மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடைபெறுகிறது.
அய்யா கருட வாகனம், குதிரை வாகனம், அனுமன் வாகனம், இந்திர வாகனத்தில் பவனி வந்து சுருள் பெறும் நிகழ்ச்சியும், அய்யாவை நாகத் தொட்டில் ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது.