Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
கடையத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மிளா
கடையம் பகுதியில் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது ஆண் மிளா மீட்கப்பட்டது.
கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பொத்தையில் கரடி, மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்நிலையில், நித்ய கல்யாணி அம்மன் கோயில் பின்புறம் உள்ள வடகால் ஓடையில் குளிக்கச் சென்றவா்கள், கால்வாயில் மிளா ஒன்று இறந்து கிடந்ததைப் பாா்த்தனா்.
இது குறித்து, கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின்பேரில், வனத்துறை ஊழியா் பசுங்கிளி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த சுமாா் 2 வயது ஆண் மிளா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இறந்த மிளாவின் வயிற்றுப் பகுதியில் காயமிருந்திருந்ததால், சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்ததா அல்லது வேறு மிருகம் தாக்கியதில் உயிரிழந்ததா என்று வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.