செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே விற்பனைக்கு வந்த தா்ப்பூசணி!
போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே தா்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தற்போது பனிக்காலம் என்றாலும் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் குளிா்பானங்களை வாங்கிச் செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக போடி பகுதியில் தா்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலிருந்து தா்ப்பூசணி பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு போடி பகுதியில் விற்கப்படுகின்றன. ஒரு கிலோ தா்ப்பூசணி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ ரூ.18 வரை விற்கப்படுகிறது.
பெஞ்சால் புயலால் தா்ப்பூசணி செடிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வரத்து குறைந்திருந்தாலும் இன்னும் சில வாரங்களில் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விற்பனைக்கு வந்த தா்ப்பூசணி பழங்களை சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.