செய்திகள் :

போதைப் பொருள் வாங்க ரூ.1 கோடி சொத்தை விற்ற பெண் தொழிலதிபர்!

post image

ஹைதராபாத்: நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன் வாங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போதைப் பொருள் வைத்திருந்தக் குற்றத்துக்காக அவரையும் மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய கொரியர் நிறுவன ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் வீடு உள்ளிட்ட இடங்களில் தெலங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்திய நிலையில், சைபர் பிரிவு காவல்துறையினர் கடந்த வாரம் 53 கிராம் கொகைன் வைத்திருந்த 34 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருளுக்கு மிக மோசமான நிலையில் அடிமையாகியிருப்பதும், அவருக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 24 மணி நேரத்தில் பத்து முறைக்கும் மேல் கொகைன் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததும், இரவில் கூட 2 அல்லது 3 முறை எழுந்து கொகைன் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொகைன் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த மருத்துவர் தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார்.

மே 9ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு 20 நாள்கள் முன்புகூட, காவல்துறையினர், அவரது வீட்டுக்குச் சென்று, அவர் காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார் என்றும், உடனடியாக அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிடுமாறும் குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையினரை திட்டி, அந்த பெண் மருத்துவர் வெளியேற்றியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், போதைப் பொருள் கொண்டு வந்த கொரியர் ஊழியரை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வந்த அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு!

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும் திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.பயங்கரவதாதிகள் மீது கடும் நடவடிக்கை ... மேலும் பார்க்க

மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் பஞ்சாப்!

இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இன்று காலை முதல்... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்பை உறுதி செய்துவரும் 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ தலைவர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியாற்றி வருவதாக... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவற்றில் இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞர்கள் பலி

கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவற்றின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலியானார்கள். கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் மணிகண்டன் ( 27... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்

சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது லாரி மோதியதில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சடோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பனா பனாரசியில் நடந்த சத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ... மேலும் பார்க்க