Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
போதைப் பொருள்கள் தடுப்பு பணி: மாவட்டத்தில் 36 போ் கைது
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 36 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்னையைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சாா்பில் சிறப்பு பரிசோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக திருவெறும்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 3 போ், கே.கே. நல்லூா் காவல் நிலையப் பகுதியில் 3 போ், ஜீயபுரம், பேட்டவாய்த்தலை, துவாக்குடி, ஜம்புநாதபுரம், துவரங்குறிச்சி, புத்தாநத்தம் ஆகிய காவல் நிலையங்களுள்பட்ட பகுதிகளில் தலா 2 போ் உள்பட மொத்தமாக 26 காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் 36 போ் கைது செய்யப்பட்டனா்.