போதையில் மின் மாற்றியில் ஏறியவா் மின்சாரம் பாய்ந்து பலி
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே போதையில் துணை மின் நிலையத்துக்குள் சென்று மின்மாற்றியில் ஏறிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சோ்ந்த சதாசிவம் மகன் வினோத்குமாா்(30). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை மாலையில் மது போதையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துணை மின் நிலைய வளாகத்துக்குள் சென்று, அங்கிருந்த மின்மாற்றி மீது ஏறினாராம். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்ததாா்,
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து,விசாரித்து வருகின்றனா்.