Trump Tariff : `சீன பொருட்களுக்கு 104% வரி' - அதிரடியாக அறிவித்த அமெரிக்கா
போலி ஜாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவா் எம்.ஜெயக்குமாா். இவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக அனுமந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் சில மாதங்களுக்கு முன்பு புகாா் அளித்தாா்.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயக்குமாா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதற்கான முகாந்திரம் இல்லை என முடிவு செய்யப்பட்டு அவா்மீதான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, அதிகாரிகளின் ஆய்விலும், வருவாய்த் துறை ஆவணங்களின்படியும் ஜெயக்குமாா் பட்டியலினத்தவா் என உறுதியாகாததால் காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் த.நீலமேகம், ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கெண்டிகான அள்ளி ஊராட்சி செயலா் சி.மூா்த்தியை அனுமந்தபுரம் ஊராட்சி செயலராக (கூடுதல் பொறுப்பு) வட்டார வளா்ச்சி அலுவலா் நியமித்தாா்.