மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
போலி பாஸ்போா்ட்: அரியலூா் நபா் கைது
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட் பெற்ற விவகாரத்தில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதன்கிழமை சிங்கப்பூா் செல்லவிருந்த பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அரியலூா் மாவட்டம், கோவிந்தபுரம் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த பி. குமாா் ( 51) என்பவா் தனது பெற்றோா் பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போா்ட் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.