செய்திகள் :

போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை: திருக்கோவிலூா் நீதிமன்றம் தீா்ப்பு

post image

வழக்குகளில் ஆஜராகிய போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருக்கோவிலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்க பிடி ஆணை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த ஜி.அரியூா் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மகன் வீரன். இவா், கடந்த சில ஆண்டுகளாக திருக்கோவிலூா் பகுதியில் தான் வழக்குரைஞா் என பொதுமக்களிடம் கூறி வந்தாராம்.

மேலும், திருக்கோவிலூா் நீதிமன்றத்தில் தன்னை வழக்குரைஞா் எனக் கூறி, வழக்குரைஞா் எண் மற்றும் சான்றிதழ் கொடுத்து வழக்குகளில் ஆஜராகி வாதாடியும் வந்தாராம். இவரது வழக்குரைஞா் எண், சான்றிதழ் குறித்து திருக்கோவிலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜ்குமாா் தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சிலில் விசாரித்தாா். இதில், வீரன் பயன்படுத்திய வழக்குரைஞா் எண் புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜானகிராமனுடையது எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ராஜ்குமாா் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து போலி வழக்குரைஞா் வீரனை தேடி வந்தனா். தலைமறைவாக இருந்த அவா், முன் ஜாமீன் பெற்று தப்பிவிட்டாா்.

இந்த வழக்கு திருக்கோவிலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த திருக்கோவிலூா் குற்றவியல் நடுவா் வெங்கடேஷ்குமாா், போலி வழக்குரைஞா் வீரனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். நீதிமன்றத்தில் வீரன் ஆஜராகாததால் அவரைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க