செய்திகள் :

ம.பி: சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையுடன் புறப்பட்ட பாஜக தலைவர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா என்ற இடத்தில் ஒரு சிறுத்தை பொதுமக்களைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தது. கடந்த சில நாட்களில் 5 பேரை அந்த சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தி இருந்தது. இதில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.

இது குறித்து உள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மனிதர்களைத் தாக்கும் சிறுத்தை பிடிபடவில்லை. இதையடுத்து உள்ளூர் பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சியாம்லால் திவேதி உள்ளூர் மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு, எந்த வித ஆயுதமும் இல்லாமல் சிறுத்தையைப் பிடிக்கக் கிளம்பிச் சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

சிறுத்தை

சியாம்லால் சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையை எடுத்துச் சென்றதுதான் இப்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சியாம்லால் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தில் 4 பேரையும், உத்தரப்பிரதேசத்தில் ஒருவரையும் சிறுத்தை கடித்துக் காயப்படுத்தி இருக்கிறது. சிறுத்தையைப் பிடித்து பொதுமக்களைக் காப்பாற்றும்படி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சிறுத்தை பயத்தால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே பயப்படுகின்றனர். சிறுத்தையைப் பிடிக்கும் வரை நான் இங்கேயே முகாமிடவும் தயாராக இருக்கிறேன். இவ்விவகாரத்தில் மக்களுக்குத் தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக நானே வந்திருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

வனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கடந்த சில நாட்களாக அந்தச் சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

`எனக்கு அரசியல் பின்புலமா... நீதித் துறையும், அரசியலும் வேறுவேறுதானே?" - யூடியூபர் இர்ஃபான்

சோசியல் மீடியா பிரபலமான யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்ட... மேலும் பார்க்க

Tejasvi Surya: எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கு கல்யாணம் - மணமகளாகும் பொன்னியின் செல்வன் பாடகி!

கர்நாடகாவின் இளம் எம்.பி-களில் ஒருவர் தேஜஸ்வி சூர்யா. பா.ஜ.க பின்னணியில் தீவிரமாக செயல்பட்டுவரும் இவர், பெங்களூரின் தெற்கு மக்களைவைத் தொகுதியிலிருந்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு திருமண... மேலும் பார்க்க

``பிரச்னை என்றால் எங்களிடம் வருகிறார்கள்; ஓட்டுப்போடும்போது..!’ - ராஜ் தாக்கரே புலம்பல்

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இத்தோல்வி ராஜ... மேலும் பார்க்க

குமரி:லேசர் ஷோ ஒளியில் மின்னிய திருவள்ளுவர் சிலை, கண்ணாடி இழைப் பாலம் | Photo Album

குமரி:லேசர் ஷோ ஒளியில் மின்னிய திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி இழைப் பாலம் பிரத்தியேக படங்கள்.! மேலும் பார்க்க

குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: 25 ஆண்டுகளுக்கு முன், சிலை உருவான வரலாற்று புகைப்படங்கள்

கன்னியாகுமரி: திருவள்ளுவர் வெள்ளி விழா.! சிலை உருவான வரலாற்று புகைப்பட கண்காட்சி.! மேலும் பார்க்க