அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
மகா கும்பமேளா குறித்து வேதங்களில் குறிப்பிடவில்லை: சமாஜ்வாதி எம்எல்ஏ கருத்து!
மகா கும்பமேளா குறித்து 144 ஆண்டுகள் எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ் கூறியுள்ளார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மக்கள் பலர் பலியாகியுள்ளனர். இந்த மரணங்களுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் உ.பி. சட்டப்பேரவையின் முன் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உ.பி. எம்.எல்.ஏ-யுமான சிவபால் சிங் யாதவ் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், “விளம்பரத்திற்காக அரசாங்கத்தின் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
144 ஆண்டுகள் கழித்து மகா கும்பமேளா நடைபெறுகிறது என்று அரசு பொய் சொல்கிறது. இதுகுறித்து எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படவில்லை" என்றார்.
இதையும் படிக்க | கும்பமேளா நீர் குளிக்க தகுதியற்றது! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசுதோஷ் சின்ஹா பேசுகையில், "உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவை நடத்தியது. அங்கு நிர்வாகச் சீர்கேட்டால் பலர் பலியாகியுள்ளனர்.
அங்கும் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கூட அரசு வெளியிடவில்லை. எத்தனை பேர் குளித்தார்கள் என்பதற்கான எண்ணிக்கையை அவர்கள் தினமும் வழங்குகிறார்கள். ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கைத் தெரியவில்லை. மகா கும்பமேளா குறித்து அரசு பல விளம்பரங்களை செய்தனர். ஆனால், அனைத்து தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.