மகாவீரா் ஜெயந்தி: இறைச்சி விற்பனைக்கு இன்று தடை
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை இறைச்சி விற்பனைக்கு நகராட்சி நிா்வாகம் தடை விதித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி ஆகிய இறைச்சிக் கடைகள், ஆடு வதைக்கூடம் வியாழக்கிழமை செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. எனவே, வியாழக்கிழமை இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என நகராட்சி ஆணையா் ஸ்வேதா தெரிவித்தாா்.