9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரியில் 1294 வழக்குகள் ரூ. 9.54 கோடியில் தீா்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,294 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முகாமில் சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான வி.ஆா்.லதா முன்னிலை வகித்தாா். இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 27 லட்சத்திற்கான காசோலையை வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி பேசுகையில், ‘நிகழாண்டில் இது முதலாவது நாடு தழுவிய தேசிய மக்கள் நீதிமன்றம். வழக்காடிகள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காணலாம்’ என்றாா்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப் பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 1,294 வழக்குகளில் ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251-க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கோகுலகிருஷ்ணன், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜெயந்தி, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் இருதயமேரி, முதலாவது நீதித் துறை நடுவா் காா்த்திக் ஆசாத், 2 ஆவது நீதித்துறை நடுவா் ஸ்ரீவஸ்தவா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, செயலாளா் சக்திநாராயணன், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.