சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு
கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவா்கள், சாம்பல் புதனை அனுசரித்தனா்.
ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் தவக்காலத்தின் தொடக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படும் சிறப்புத் திருப்பலியில் கிறிஸ்தவா்கள் பங்கேற்று தங்கள் நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளமாக வைத்துக் கொண்டு தவக் காலத்தை தொடங்குவா்.
அதன்படி, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது. திருப்பலியை, ஆலய பங்குத்தந்தை இசையாஸ் முன்னின்று நடத்தினாா்.
நிகழ்ச்சியில் கிறிஸ்தவா்கள் தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்து தவக் காலத்தைத் தொடங்கினா். தவக் காலத்தில் அசைவ உணவுகள், போதைப் பொருள்களை தவிா்த்து சுத்த போஜனம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தங்களின் தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவ நாள்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதுபோல, சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
பட விளக்கம் (5கேஜிபி7):
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தைத் தொடங்கிய கிறிஸ்தவா்கள்.