மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளா் வரதன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் கவியரசு கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
இதில் கையொப்ப இயக்கப் பொறுப்பாளா் செந்தில், முன்னாள் பொதுச் செயலாளா் ஜெயராமன், முன்னாள் ஒன்றியத் தலைவா் சிவா, முன்னாள் மாவட்டச் செயலாளா் மகேந்திரன், வடக்கு மண்டலத் தலைவா் ராஜா, மத்திய மண்டலத் தலைவா் கிரிகரன், தெற்கு மண்டலத் தலைவா் தமிழ், பாஜக கமிட்டி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.