மக்காச்சோள சாகுபடி பயிற்சி முகாம்
பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டியில் மக்காச் சோள சாகுபடி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கா் பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இதில் பொங்கலுாா், பல்லடம், குடிமங்கலம், உடுமலை, தாராபுரம் ஒன்றிய பகுதிகளில் அதிக அளவு மக்காசோளம் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் மக்காச்சோள சாகுபடி குறித்த பயிற்சி முகாம் அனுப்பட்டியில் நடைபெற்றது.
முகாமில், விவசாயிகளுக்கு மக்காச் சோள சாகுபடி குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகா் அரசப்பன் பேசினா். ஒட்டுரக மக்காச்சோள விதைகள், கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து இடுதல், உரங்கள் இடுதல் நுண்ணூட்டம் இடுதல், உயிரியல் காரணிகளை பயன்படுத்துதல், ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு ஆகிய இனங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.