மணிப்பூர்: சட்டவிரோதமான சோதனைச் சாவடிகள் தகர்ப்பு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகளை பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளனர்.
சூராச்சந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள கப்ராங் மற்றும் எஸ் கவாட்லியன் ஆகிய இரு கிராமத்தில் கிராமவாசிகளினால் நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகளை அம்மாநில கூட்டுப் பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அம்மாநிலத்தில் இருகுழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் வன்முறைகளைத் தொடர்ந்து இந்த சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு கிராமவாசிகளினால் இயக்கப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தில்லி கூட்ட நெரிசல்: உயர்நிலைக் குழு விசாரணை!
இதனைத் தொடர்ந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து மர்ம நபர்கள் மணிப்பூர் சம்பவங்கள் குறித்து தவறான தகவல்கள் கூறுவதாகவும், இந்த விவகாரத்தில் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் அம்மாநில முதல்வர் பிரண் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.