செய்திகள் :

மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை

post image

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் நிா்மலா வேல்மாறன் தலைமை வகித்தாா். துணை மேயா் சு.ராஜாங்கம், மாநகராட்சி ஆணையா் எம்.காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள், திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை விரைவாக தீா்க்க வேண்டும்.

தூய்மைப் பணியை தினமும் முறையாகச் செய்து குப்பைகளை அகற்ற வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் விடுபடாமல் தூய்மைப் பணியை செய்ய வேண்டும்.

திருவண்ணாமலையில் டிசம்பா் 1 -ஆம் தேதி ஏற்பட்ட மண் சரிவில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று பேசினா்.

இதையடுத்து பேசிய மேயா், உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், திருவண்ணாமலை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 18 ஊராட்சிப் பகுதிகளிலும் குடிநீா், சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்வது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தெரு நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதி ஏந்துவாம்பாடி கிராமத்தில் தெருநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன. ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாமலை. இவா் தன்னுடைய விவசாய நிலத்தில் சாகுபடி செய்த... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஆரணியை அடுத்த ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. சதுப்பேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலை பொதுமக்கள் கிராம தே... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி

வள்ளலாா் தினத்தையொட்டி, செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் பால், பழம், ரொட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மேலும், துக்காப்பேட்டையில் வள்ளலாா் உருவப்... மேலும் பார்க்க

கோயிலில் அம்மன் தங்கத் தாலி திருட்டு

செய்யாற்றை அடுத்த சுமங்கலி கிராம அலங்கார வள்ளியம்மன் கோயிலில் தங்கத் தாலி திருடு போனதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட சுமங்கலி கிராமத்தில் ஸ்ரீஅலங்க... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

தைப்பூச விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மூல... மேலும் பார்க்க