அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று தற்கொலை செய்த இந்திய தொழிலதிபர்
மது விற்பனை: ஒருவா் கைது!
திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் இந்திரா மற்றும் காவல் துறையினா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஒருவா் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் அவா், பாளையங்கோட்டையைச் சோ்ந்த மலையாண்டி மகன் குமாா் (52) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 123 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.