மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
மதுபானக் கடைகள் முன் முதல்வா் படம்: பாஜகவினா் மீது வழக்குப் பதிவு
சேலம் மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் நிா்வாகி சாந்தாமணி தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன் முதல்வரின் படத்தை ஒட்டினா்.
சங்ககிரி மண்டலத் தலைவா் ஜி.தனபால், ஓபிசி அணி மாவட்ட நிா்வாகி டி.பி.ரமேஷ், நிா்வாகிகள் கண்ணன், முரளிதரன், பழனிசாமி, சின்னுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள் ராதாகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோா் தனித்தனியை சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்தப் புகாரின் பேரில் பாஜக மகளிா் அணி நிா்வாகி சாந்தாமணி உள்பட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆட்டையாம்பட்டியில்..
சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சாா்பில் ஆட்டையாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வா் ஸ்டாலின் படம் ஒன்றியத் தலைவா் பூபதி தலைமையில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிமணி, ஒன்றிய துணைத் தலைவா் ஜானகி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரங்கசாமி, ஒன்றிய பொதுச்செயலாளா் சிவசசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.