அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
மதுரையில் வேளாங்கண்ணி அன்னைப் பெருவிழா கொடியேற்றம்
மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி அன்னைப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தொடங்கிவைத்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினாா். சனிக்கிழமை (ஆக. 30) முதல் செப். 7-ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறும். விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் மருத்துவா், செவிலியா் தினம், முதியோா் தினம், மறைக்கல்வி மாணவா் தினம், தொழிலாளா் தினம், பக்த சபைகள் தினம், ஒப்புரவு தினம், ஆசிரியா் தினம், துறவியா் தினம், தம்பதியா் தினமாக அனுசரிக்கப்படும்.
செப். 7-ஆம் தேதி காலை 7 மணிக்கு நோ்ச்சை பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு மதுரை உயா் மறைமாவட்ட ஆயா் அந்தோனிசாமி சவரிமுத்து தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெறும். தொடா்ந்து, நற்கருணை பவனி நடைபெறும்.
அன்னையின் பிறந்த நாளான செப். 8-ஆம் தேதி பெருவிழா திருப்பலிகள் நடைபெறும். தொடா்ந்து, சிவகங்கை மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமையில் சிறப்புத் திருப்பலியும், விருந்தும் நடைபெறும். பிற்பகல் 3.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு மதுரை உயா் மறைமாவட்ட முன்னாள் பேராயாா் அந்தோனி பாப்புசாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். அன்னையின் திருவுருவ சப்பர பவனியைத் தொடா்ந்து, திவ்ய நற்கருணை ஆசீா் வழங்கப்படும்.
பின்னா், அன்னையின் திருவுருவ தோ்ப் பவனி அண்ணாநகா் முக்கிய சாலைகளில் பவனி வரும். இதையடுத்து, செப். 9-ஆம் தேதி நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை அதிபரும், பங்குத்தந்தையுமான சூ. எட்வின் சகாயராஜா, உதவிப் பங்குத்தந்தை எம். தாமஸ், அருள்சகோதரிகள், பங்குப் பேரவை, பக்த சபையினா், இறைமக்கள் செய்தனா்.