மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு
செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமணி (75). கண் பாா்வை சரியில்லாமல் இருந்ததால், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் மூதாட்டியை மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.