75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்
வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா்.
அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்வதற்காக நிறுத்தினா்.
போலீஸாரைக் கண்டவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து, போலீஸாா் லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.