தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு இணை திட்ட அலுவலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் பி.சி.காா்த்திகேயன், இயற்கை விவசாயி ஜெயக்குமாா், இயற்கை விழிப்புணா்வு ஒருங்கிணைப்பாளா்கள் சாந்தகுமாா், பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ராணுவ வீரா் ராஜி வரவேற்றாா்.
மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலா் ஜோசப் பெடரிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
அப்போது, அரசு, கோயில் நிா்வாகம் மற்றும் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் கடந்த 10 ஆண்டுகளாக, அண்டுதோறும் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து வருவது பாராட்டுக்குரியது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளா்ப்பது மட்டுமே தீா்வாக அமையும் எனப் பேசினாா்.
தொடா்ந்து, அனைவரும் இயற்கை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். நிறைவில் திட்ட அலுவலா்கள் பிரபு, வேல்முருகன் நன்றி கூறினா்.