``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு
செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன.
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் வட்டம் சிறுநாவல்பட்டு, பிரம்மதேசம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பிரம்மதேசம் கிராமத்தில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே. சீனிவாசன், எம்.தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கரன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை வழங்கி தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 82 மனுக்களும், மகளிா் உரிமைத்தொகை கோரி 172 மனுக்களும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 35 மனுக்களும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 11 மனுக்களும், வேளாண்மை நலத்துறை சாா்பில் 11 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் 29 மனுக்கள் உள்பட 354 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அப்போது, வருவாய்துறை சாா்பில் இருவருக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழை எம்.எல்.ஏ.ஒ.ஜோதி வழங்கினாா்.
முகாமில் மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழுத் தலைவா் கருணாகரன், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் செந்தில்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த கொட்டாவூா், பரமனந்தல், குயிரம் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தளாவாநாய்க்கன்பேட்டை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ கிரி கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.
முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா் மிருணாளினி, திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், மத்திய ஒன்றியச் செயலா் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஆரணி
ஆரணி அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
ஆரணி கோட்டாட்சியா் சி.சிவா தலைமை வகித்தாா். ஆரணி ஒன்றியச் செயலா் துரைமாமது வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முள்ளிப்பட்டு, மலையாம்பட்டு, புங்கம்பாடி ஆகிய ஊராட்சிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இம்முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆரணி வட்டாட்சியா் கௌரி முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் மோகன், சுந்தா், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன், முள்ளிப்பட்டு ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

