Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் - `சமூக நீதி'யின் முக்கியத்துவமும் த...
மனு பாக்கருக்கு பிபிசி விருது
கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் ‘சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது’, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுக்கான போட்டியில் அதிதி அசோக் (கோல்ஃப்), அவனி லெகாரா (பாரா துப்பாக்கி சுடுதல்), ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்), வினேஷ் போகாட் (மல்யுத்தம்) ஆகியோரும் இருந்த நிலையில், மனு பாக்கா் அதற்குத் தோ்வாகியிருக்கிறாா்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற மனு பாக்கா், சுதந்திரத்துக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்தியா் (16 வயது) என்ற சாதனையையும் அவா் 2018-இல் பதிவு செய்தாா். அா்ஜுனா விருதும் வென்றிருக்கும் மனு பாக்கா், கடந்த 2021-இல் இதே பிபிசியின் வளா்ந்து வரும் வீராங்கனை விருதும் பெற்றுள்ளாா்.
மனு பாக்கருடன் இந்த ஆண்டு, பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி (சிறந்த வளா்ந்து வரும் வீராங்னை விருது), முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் (வாழ்நாள் சாதனையாளா் விருது), பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா (சிறந்த பாரா வீராங்கனை விருது), செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் (மாற்றத்துக்கான விருது) ஆகியோரும் விருது பெற்றுள்ளனா்.