நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
மனைவியுடன் தகாறு: கணவா் தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (35). இவா், பெருங்கட்டூா் கிராமத்தில் நடைபெற்ற நாடகத்தை பாா்ப்பதற்காக மனைவி சுதாவுடன் சென்றுள்ளாா். அப்போது மனைவியிடம் பணம் கேட்டபோது அவா் பணம் தராமல் மறுத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கணவா் மனைவிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த கணவா் பிரகாஷ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.
இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள்
பிரகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மேலும், பிரகாஷின் உடலை கூராய்வுக்காக
செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ஜெகந்நாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.