செய்திகள் :

மனைவியை கவனிக்க விருப்ப ஓய்வு எடுத்த ஊழியர் - ஃபேர்வெல் நிகழ்வில் கணவன் கண்முன்னே உயிரிழந்த சோகம்

post image

சில கணவன் - மனைவி இடையே அதீத அன்பு இருக்கும். ஒருவர் இல்லாமல் ஒருவரால் வாழ முடியாத அளவுக்கு இருவருக்கும் இடையே பாசம் இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா என்ற இடத்தில் இருக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான குடோனில் மேலாளராக பணியாற்றி வந்தவர் தேவேந்திரா. இவருக்கு ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனைவி தினாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் இருதய நோயாளியாவார். அவரை கவனித்துக்கொள்வதற்காக தேவேந்திரா பணியில் இருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் இருந்த நிலையிலும் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார்.

பணியில் கடைசி நாளில் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து தேவேந்திராவிற்கு பிரியாவிடை(Farewell) பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த பார்ட்டியில் தேவேந்திராவும், அவரின் மனைவியும் கலந்து கொண்டனர். இருவருக்கும் ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழா உற்சாகமாக சென்று கொண்டிருந்த போது தினா தனக்கு லேசான மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே தேவேந்திரா தனது மனைவியை மெதுவாக இருக்கையில் அமர வைத்து அவரின் முதுகை பிடித்து தடவிக்கொடுத்தார். தேவேந்திராவும், மற்றவர்களும் தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டனர். ஒருவர் வீடியோவிற்கு போஸ் கொடுக்கும்படி கூறி தனது மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

அந்நேரம் தினா அப்படியே தனது தலையை மேஜை மீது சாய்த்தார். அவரது கணவர் அவரை எழுப்ப பார்த்தார். ஆனால் அவர் அப்படியே சரிந்து விழுந்தார். உடனே தண்ணீர் கொண்டு வரும்படி அனைவரும் கத்தினர். மேலும் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை சோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். கணவன் கண் முன்னிலையில் மனைவி அப்படியே விழுந்து இறந்தது அனைவருக்கும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது. மனைவியை கவனித்துக்கொள்வதற்காக விருப்ப ஓய்வு எடுத்த தேவேந்திராவால் தனது மனைவிக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

'12 மனைவிகள், 102 பிள்ளைகள், 578 பேரன்,பேத்திகள்...' - முதியவரைக் காணக் குவியும் சுற்றுலாப் பயணிகள்

உகாண்டாவில் ஒரு முதியவர் 12 பெண்களைத் திருமணம் செய்து 102 குழந்தைகளுக்குத் தந்தையாகி இருக்கிறார். கிழக்கு உகாண்டாவில் உள்ள முகியா என்ற கிராமத்தைச் சேர்ந்த முஷா ஹஷாயா (70) என்பவர் தான் 12 பெண்களைத் திர... மேலும் பார்க்க

`சிறுநீரக பாதிப்பு; தீவிர சிகிச்சை’ - தவிக்கும் ரஜினி மன்ற முன்னாள் நிர்வாகி சத்யநாராயணன்

சத்ய நாராயணன், ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர். 1990-களில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இவரை ரஜினியின் தளபதி என்றே சொல்வார்களாம். ரஜினியின் நம்பிக்கையை பெற்று அவரது ஆலோசனைப்படி தமிழகம் ம... மேலும் பார்க்க

மும்பை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாய்; குற்றவாளி விடுவிக்கப்பட்டதாக நடிகை புகார்; பின்னணி என்ன?

மும்பை புறநகர்ப் பகுதியில் இருக்கும் நைகாவ் என்ற இடத்தில் ஒன்றரை வயது நாய்க்குட்டியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த நாய்க்குட்டியை நடிகை ஜெயா பட்டாச்சாரியா மீட்டு தனது கட்டுப்பாட்டில் வளர... மேலும் பார்க்க

PV Sindhu: அஜித், சிரஞ்சீவி, மிருணாள்... பி.வி சிந்து - வெங்கட் தத்தா சாய் திருமணம் | Photo Album

பி.வி சிந்து - வெங்கட் தத்தா சாய் திருமணம் பி.வி சிந்து - வெங்கட் தத்தா சாய் திருமணம் பி.வி சிந்து - வெங்கட் தத்தா சாய் திருமணம் பி.வி சிந்து - வெங்கட் தத்தா சாய் திருமணம் பி.வி சிந்து - வெங்கட் தத்தா... மேலும் பார்க்க

Gauri Khan: `திருமணத்திற்கு பின் ஏன் கணவரின் மதத்திற்கு மாறவில்லை'- ஷாருக் மனைவி கெளரி கான் விளக்கம்

நடிகர் ஷாருக் கான் தனது மனைவி கெளரி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாருக் கான் முஸ்லிமாக இருந்தாலும், இந்துவான கெளரி கான் திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் மதத்திற்கு மாறவில்லை. தொடர்ந்து இந... மேலும் பார்க்க

கோயில் உண்டியலில் விழுந்த IPhone; மீண்டும் வழங்கப்படுமா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோயில் உள்ளது.இந்தக் கோயிலுக்கு அண்மையில் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது, தரிசனம் செய்துவிட்டு உண்... மேலும் பார்க்க