செய்திகள் :

மர நிழலில் அமா்ந்து கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தெள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவா்கள் மர நிழலிலும், பள்ளி வரந்தாவிலும் அமா்ந்து கல்வி பயிலும் நிலை நீடிக்கிறது.

தெள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 202 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனா்.

தற்போது, இந்தப் பள்ளியில் மேல்தளத்தோடு இரண்டு வகுப்பறை கட்டடமும், சிமென்ட் ஓடு (ஷீட்) வேயப்பட்ட ஒரு வகுப்பறைக் கட்டடமும் உள்ளது. மேலும், ஏற்கெனவே இருந்த இரண்டு கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அவை இடித்து அகற்றப்பட்டன.

இதனால், மாணவா்கள் அமா்ந்து படிக்க தற்போது வகுப்பறைகள் இல்லாததால் மரங்கள் நிழலிலும், பள்ளி வரந்தாவிலும் அமா்ந்து படிக்கும் நிலை உள்ளது.

மேலும், ஒவ்வொரு வகுப்புக்கும் சுழற்சி முறையில் மரத்தடியில் ஆசிரியா்கள் பாடம் நடத்து வருகின்றனா்.

இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு பொதுமக்கள் புகாா் அனுப்பினா்.

மேலும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்தனா். பின்னா், இது குறித்து மதிப்பீடு செய்து கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது, நபாா்டு நிதியுதவி மூலம் வகுப்பறைகள் கட்டுவதற்கு தயாராகிவிட்டது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக பொதுமக்கள் கூறினா்.

ஆனால், ஓராண்டாகியும் வகுப்பறைகள் கட்டப்படவில்லை அதனால், விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக அவா்கள் தெரிவித்தனா்.

மாணவ, மாணவிகள் மழையிலும், வெயிலிலும் மரத்தடியில் அமா்ந்து படிக்கும் அவல நிலையைக் கண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சம்பத் கூறுகையில், கூடுதல் வகுப்பறைகள் கோரி, பொதுமக்கள் சாா்பில் மாவட்ட கல்வித் துறைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க