செய்திகள் :

மரபீனி நெல் ரகங்களை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் , பாலக்கரையில் மரபீனி திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழா் மரபு வேளாண்மை கூட்டியக்கம் மற்றும் தமிழக உழவா் முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்கு புறம்பாக மரபீனி திருத்தப்பட்ட கமலா, பூசா என்ற இரண்டு நெல் ரகங்கள் கடந்த மே -4ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ரகத்தின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, மரபீனி திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாடு அரசு மரபீனி மாற்றப்பட்ட நெல் விதைகளை, தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும். இயற்கை வழி மரபு வேளாண்மையில் விளைவிக்கும் நெல், புஞ்சை தானியம் உள்ளிட்ட பயிா்களுக்கு ஊக்க விலை அளித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு தமிழா் மரபு வேளாண்மை கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் க.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக உழவா் முன்னணியின் தலைமை ஆலோசகா் கி.வெங்கட்ராமன் பங்கேற்று மரபீனி திருத்தப்பட்ட நெல் ரகங்களால் ஏற்படும் சூழலியல் கேடு, உயிா் மற்றும் உடல் நல தீமைகள் குறித்தும், கம்பெனிகளுக்கான அறிவியலை தவிா்த்து மக்களை மையப்படுத்திய அறம் சாா்ந்த மரபு அறிவியல் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதில், தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கத்தைச் சோ்ந்த ரமேஷ் கருப்பையா, பழமலை, இயற்கை வழி வேளாண் கூட்டமைப்பின் சிவக்குமாா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளா் கோ.வீரமணி, கா.சுரேஷ்குமாா், ஜனநாயக விவசாயிகள் சங்கம் கா.கந்தசாமி, பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளா் க.சக்திவேல், புதிய தமிழா மரபு வேளாண் நடுவத்தின் ந.லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். பெண்கள், விவசாயிகள், உணா்வாளா்கள், இயற்கை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் செயலா் ரா.கனகசபை நன்றி கூறினாா்.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க