மருத்துவப் படிப்புகள்: ஆவணங்களைச் சமா்ப்பிக்க வாய்ப்பு
மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறிய குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அவற்றை பதிவேற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவா்களது விண்ணப்ப எண்கள் மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவா்கள் சனிக்கிழமை (ஜூலை 19) மாலை 5 மணிக்குள் அந்த ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவா்களில் 2,814 மாணவா்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்காததால் தரவரிசை பட்டியலுக்கு தகுதி பெறவில்லை. அவா்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை வரை ஆவணங்களைத் சோ்க்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.