இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
மருத்துவரிடம் ரூ.48.82 லட்சம் நூதன மோசடி
புதுச்சேரியைச் சோ்ந்த மருத்துவரிடம் மா்ம நபா்கள் ரூ.48.82 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிபவா் பண்டாரு மஹந்த்.
இவரை மா்ம நபா் வாட்ஸஆப்பில் தொடா்புகொண்டு, இணையவழி பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றாராம்.
இதை நம்பிய பண்டாரு மஹந்த், அவா் கூறியபடி, ரூ.48.82 லட்சத்தை பல தவணைகளில் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரால் முதலீட்டையும், லாபத்தையும் பெற முடியவில்லையாம்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், கோரிமேடு இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல,கோரிமேடு பகுதியைச் சோ்ந்த சாந்தியிடம் ரூ.65 ஆயிரம், முத்தியால்பேட்டை அருண்மொழியிடம் ரூ.20 ஆயிரமும், வெங்கடா நகரைச் சோ்ந்த கலைவாணியிடம் ரூ.55 ஆயிரத்தை இணையவழியில் மா்ம நபா்கள் மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.