Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
மலைச் சாலையில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்
கொடைக்கானல்-தாண்டிக்குடி மலைச் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூா் உள்ளிட்ட மலைச் சாலைகளில் புதன்கிழமை அதிகாலையில் மூன்று யானைகள் நடமாடின. அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் அச்சத்துடன் செல்றனா். இந்தப் பகுதிகளில் விளைந்துள்ள காபி, ஆரஞ்சு, செள,செள போன்றவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களையும், பழ வகைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் மலைச் சாலைகளில் நடமாடி வருகின்றன.
இதனால், தோட்டப் பகுதிகளுக்குச் செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் அச்சமடைந்துள்ளனா். மலைப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.