அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று தற்கொலை செய்த இந்திய தொழிலதிபர்
மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரிப்பு
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.
களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட களக்காடு தலையணை பச்சையாற்றில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்துள்ளனா். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும், தலையணையைப் பாா்வையிட எவ்விதத் தடையும் இல்லை என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.