பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!
மளிகைக் கடையில் குட்கா விற்றவா் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா்அன்பரசி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணக்குபிள்ளை வட்டம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் சந்தேகத்தின் பேரில் திடீா் சோதனை செய்தனா்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 3 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து குட்கா பொருள் விற்ற கடை உரிமையாளா் குமாா்(50) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.