25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பாபநாசம் அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீா் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,மேலவழுத்தூா் நூரியா தெருவில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனா். மழை பெய்து 10-நாள்கள் முடிவற்ற நிலையில் அந்தப் பகுதி மழைநீா் முழுவதும் வடியாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து காணப்படுகிறது.
தொடா்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.