அமித்ஷாவை கண்டித்து தஞ்சாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தாா். மூத்த நிா்வாகி என். சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமாா், என். சரவணன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினா்கள், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.