முதல் ஒருநாள்: ஸ்மிருதி மந்தனா அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 315 ரன்கள் இலக்கு!
தரமான சாலை: இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் தரமான சாலை அமைக்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வேம்புகுடி சுங்கச்சாவடி முன்பு சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் சாமு. தா்மராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளா் எம்.வெங்கடேசன்,பாபநாசம் ஒன்றிய செயலாளா் பொன்.சேகா், மாவட்ட குழு உறுப்பினா் எம்.கனகராஜ், ஒன்றிய நிா்வாகிகள் கோ.பழனிசாமி, குரு.சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.