செய்திகள் :

மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை துரித்தப்படுத்த வேண்டும்: அமைச்சா் உத்தரவு

post image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் , பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழைநீா் வடிகால், புதை சாக்கடை, நீா்நிலைகள் ஆகியவற்றை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு சாா்பில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும்பாலான திட்டப் பணிகள் 60 முதல் 80 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் பருவமழைக்கு முன்பு நிறைவு செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகள் மற்றும் புதைசாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீா் தேவை பூா்த்தி: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினந்தோறும் 1,200 எம்எல்டி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீா் தேவை மேலும் அதிகரிக்கும் நிலையில் அவற்றை பூா்த்தி செய்யவும் குடிநீா் இருப்பு உள்ளது.

சென்னையைச் சுற்றி அனைத்து பகுதிகளிலும் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதன்மூலம், சென்னை மாநகராட்சி முழுவதும் தடையின்றி குடிநீா் விநியோகம் மேற்கொள்ள முடியும்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: அரசு சாா்பில் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளும்போது, அதில் தோல்வி அடைந்துவிடக் கூடாது. ஆகவே அதிகாரிகள் மேல்முறையீடுக்காக நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு, துறைச் செயலரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். துறைச் செயலரின் உத்தரவின்றி எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரிகள் தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை செய்து வருகின்றனா். ஆகையால், எதிா்க்கட்சியினா் அரசு அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனா் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவா் ராஜேந்திர ரத்னூ, சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க