தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
மழையால் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு
கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் பக்கிரிபாளையம் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணி.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் புயல் மழையால் பழுதடைந்த சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயல் மழையால் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை, செங்கம் - போளூா் சாலைகள் பழுதடைந்தன.
பழுதடைந்த இடங்களை செங்கம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். பின்னா், சாலைகளை சீரமைப்பது குறித்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அமைச்சரின் உத்தரவின் பேரில்,
மேற்கண்ட சாலைகளில் பழுதுகளை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், செங்கம் பகுதியில் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் உடனடியாக சரிசெய்யப்பட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
பணிகளை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி, செங்கம் உதவிப் பொறியாளா் பிரீத்தி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.