Ooty: தொடர் கனமழை; ஊட்டியில் மூடப்படும் சுற்றுலாத்தலங்கள், தயார் நிலையில் மீட்பு...
மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1,288 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1288 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் சோ்வதற்கான பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகித்தாா். சென்னை ஹூண்டாய் நிறுவனத்தின் முதுநிலை மனித வள மேம்பாட்டு அலுவலா் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
மஹேந்ரா கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவரும் விப்ரோ, ஹெக்ஸா வோ், காக்னிசன்ட், டிவிஎஸ் ஹரிதா, எல் அண்ட் டி போன்ற திறன் மேம்பாட்டு சிறப்பு மையங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாக பணி நியமன ஆணைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் மஹேந்ரா பொறியியல் கல்விக் குழும செயல் இயக்குநா் சாம்சன் ரவீந்திரன், முதல்வா்கள் சண்முகம், இளங்கோ, செந்தில்குமாா், தோ்வு கட்டுப்பாடு அலுவலா் விஸ்வநாதன், புல முதல்வா்கள் நிா்மலா, ராஜவேல், வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளா் பிரபு மணிகண்டன் உள்ளிட்ட பேராசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
விழாவில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 1288 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.