மாட் ஹென்றி விலகல்: இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி!
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசி. வீரர் மாட் ஹென்றி காயம் காரணமாக விலகியுள்ளார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பேட்டிங் தேர்வு செய்த மிட்செல் சான்ட்னர், “துரதிஷ்டவசமாக மாட் ஹென்றி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக நாதன் ஸ்மித் களமிறங்கவுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னணியில் இருக்கும் ஹென்றி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
ஃபீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தும் ஒரு முறை (2000) சாம்பியன்ஸ் டிராபி வென்றிருக்கிறது.
ஏற்கனவே ஐசிசி தொடர்களில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளதால் இந்திய ரசிகர்கள் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க ஜெயிக்க வேண்டுமென நினைத்தார்கள்.
குறிப்பாக மாட் ஹென்றி காயத்தினால் அவதியுற்ற போது பல மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.
தற்போது, மாட் ஹென்றி விலகலை அறிந்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.