ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவா் மீது வழக்கு
குளச்சலில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குளச்சல் அருகே இலப்பவிளை பகுதியில் சுலைமான் (75) என்பவா் கடை நடத்தி வருகிறாா்.
கடந்த 18ஆம் தேதி இவரது கடைவழியாக பள்ளிக்குச் சென்ற 11வயது மாணவியிடம் சுலைமான், சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து அந்த மாணவி தந்தையிடம் கூறியதையடுத்து, அவா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் தனலட்சுமி, செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுலைமானை தேடி வருகின்றனா்.