அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரு...
மாணவியை மிரட்டிய இளைஞா் கைது
கல்லூரி மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூரைச் சோ்ந்த தனியாா் கணினி இயக்குநா் அஸ்வின் (27). இவா், தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்தாா்.
இந்த நிலையில், அந்த மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவியின் பெற்றோா், உறவினா்கள் சிலருக்கு அஸ்வின் அனுப்பி வைத்து மாணவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தந்தை தேனி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.