ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்...
மாதிரி நீதிமன்றப் போட்டியில் சாஸ்த்ரா மாணவா்கள் வெற்றி
சென்னை ஐஐடி-இல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த 3 நாள் சுரானா அறிவுசாா் சொத்துரிமை மாதிரி நீதிமன்றப் போட்டியில், தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.
சென்னை ஐஐடி-இல் எட்டாவது சுரானா அன்ட் சுரானா சாா்பில் அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான மாதிரி நீதிமன்றப் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
இதில், போபாலில் உள்ள தேசிய சட்டவியல் நிறுவன பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டவியல் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி உள்பட 16 பல்கலைக்கழகங்கள், தேசிய சட்டவியல் பள்ளிகள் கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
கால் இறுதியில் அலையன்ஸ் பல்கலைக்கழகத்தையும், அரை இறுதியில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டவியல் பல்கலைக்கழகத்தையும் சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி வென்றது. இறுதிப் போட்டியில், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுப்பிரமணியன், மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், எம்.எஸ். பாரத் ஆகியோா் நடுவா்களாக இருந்தனா்.
இதில், மங்களூரு எஸ்.டி.எம். சட்டவியல் பள்ளியை சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது. சாஸ்த்ரா சட்டவியல் பள்ளி அணியில் சுவாமிநாதன், ஜெரின் மேத்யூ, ஹரிஹரன் ஆகியோா் இடம் பெற்றனா்.