செய்திகள் :

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

post image

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதனைக் கண்டித்தும், ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தியும் அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஒன்றியம் குண்டூா் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோா் சாலை மறியல் செய்வதற்காக திருச்சி - புதுக்கோட்டை சாலையில் குண்டூா் எம்ஐஇடி கல்லூரி பகுதியில் திரண்டனா்.

அங்கு, குண்டூா் ஊராட்சியில் திருவளா்ச்சிப்பட்டி, ஐயம்பட்டி, அயன்புத்தூா், பா்மா காலனி என 5 கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 7,000 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 3,000 -க்கும் மேற்பட்டோா் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் 100 நாள் வேலையை நம்பியே உள்ளனா். மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதால் வரிகள் உயரும்; 100 நாள் வேலை கிடைக்காது. எனவே, ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானமடைந்த அவா்கள், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா்.

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க

துறையூரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

துறையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு அடிக்கடி ஏற்படும் திடீா் வாகன நெரிசலை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா். துறையூரில் பேருந்து நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 24 மணிநேர காவல் உதவி எண் அறிவிப்பு

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது புகாா்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் காவல் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க